ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் இறைவி : ஸ்ரீ முத்துமாரியம்மன். திருக்கோயில் அமைவிடம்: கொத்தபுரிநத்தம், கண்டமங்கலம் அஞ்சல், மண்ணாடிப்பட்டு கொம்யூன், புதுச்சேரி - 605-102. திருத்தல விருட்சம்: வேம்பு. இதர சன்னிதிகள்: ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ நவக்கிரகம். துணைக் கோயில்கள் : ஸ்ரீ பாலவிநாயகர் ஆலயம், ஸ்ரீ பாலமுருகன் ஆலயம். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் சிறிய புற்றுக் கோயிலாக இருந்தது. நாளடைவில் புற்று மண் சரியத் தொடங்கியது. கிராம மக்கள் ஒன்று கூடி சிறிய அளவில் ஆலயம் ஒன்று எழுப்பினர். பிறகு 15.9.1994 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டினர். இவ்வாலயத்திற்கு 15-7-2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர உயரம் : ராஜகோபுரம் 65 அடி...