புதுச்சேரி பிரதேசத்திலுள்ள 243 கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு என்ற ஒரு துறை நிறுவப்பட்டுள்ளது. இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1972 மற்றும் விதிகள் 1975ல் அளித்துள்ள அதிகாரத்தின்படி அறங்காவல் குழுக்கள் / சிறப்பு அதிகாரிகள் / நிர்வாக அதிகாரிகள் இத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில்களையும் நிர்வகித்து வருகின்றனர்.