Screen Reader Access     A-AA+
×
Go-Top 
Thiruppani

திருப்பணி


வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த திருக்கோயில்கள், ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் பாடிப் புகழப்பட்ட திருக்கோயில்கள், பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள சிறு சிறு திருக்கோயில்கள் ஆகிய பல்வேறு புணிதமான திருக்கோயில்கள் புதுச்சேரி உள்ளன. இவற்றினை திருப்பணி செய்து புதுப்பிக்கும் பணி இன்றியமையாததாகும்.

இதனை கருத்தில் கொண்டு, கீழ் கண்ட நிதிகள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன:

  1. பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை
  2. திருக்கோயில்களின் சொந்த நிதி
  3. நிதிமாற்ற நிதி
  4. அரசு மானியம்
  5. பொதுநல நிதி
  6. ஆலய மேம்பாட்டு நிதி
  7. கிராமப்புறத் திருக்கோயில்கள் திருப்பணி நிதி
  8. திருக்கோயில் திருப்பணி மற்றும் அறப்பணிநிதி
  9. உபயத் திருப்பணி
  10. நிதி ஆணைய மானியம்
  11. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களுக்கான திருப்பணி நிதி
  12. சுற்றுலாத்துறை நிதி

  1. பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை

  2. இறை நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சமய ஈடுபாடு கொண்டோர், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டு பெரும்பாலான திருப்பணிகள் நடைபெறுகின்றன.

  3. திருக்கோயில் நிதி

  4. பல்வேறு திருக்கோயில்களின் திருப்பணி அவற்றின் நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன.

  5. நிதி மாற்றம்

  6. நிதிவசதி மிக்க திருக்கோயில்களின் உபரிநிதியிலிருந்து, நிதி தேவையான திருக்கோயில்களுக்குத் திருப்பணிகளை மேற்கொள்ள இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் 36-வது பிரிவின் கீழ் நிதி மாற்றம் மூலமாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

  7. அரசு மானியம்

  8. அரசு மானியமாக ஆண்டுதோறும் திருக்கோயில்களின் திருப்பணிக்கென வழங்கப்பட்டு வருகிறது.

  9. பொதுநல நிதி

  10. ஆணையரின் பதவிப் பெயரில் `பொதுநல நிதி` என்ற நிதியம் தனிநபர்கள் தானாக முன் வந்து அளிக்கும் நன்கொடை மற்றும் இந்துசமய நிறுவனங்களின் பங்களிப்பு தொகை ஆகியவற்றைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு பொதுநல நிதி மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

  11. உபயத் திருப்பணி

  12. பக்தர்கள் தாமே முன் வந்து தனது சொந்த செலவிலும், துறை மேற்பார்வையிலும் திருக்கோயில்களுக்குத் திருப்பணி செய்வது வழக்கத்திலுள்ளது.


திருக்குட முழுக்கு


பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் ஆகம விதிப்படி ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் திருக்கோயில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகின்றன:

  1. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப் பெற்ற மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற பழமை வாய்ந்த திருக்கோயில்கள்

  2. வரலாற்றுப் புகழ் பெற்ற மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள்.

  3. பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்கள்.

  4. கிராமப்புறங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள சிறு திருக்கோயில்கள்.

திருக்குளங்களை புதுப்பித்து திருப்பணி செய்தலும், மழைநீர் சேகரிப்பும்


231 திருக்கோயில்களில் 10 திருக்குளங்கள் உள்ளன.இவைகளில் 10 திருக்குளங்கள் நல்ல நிலையில் உள்ளன, மீதமுள்ள திருக்குளங்கள் புனரமைப்பு செய்து மழைநீர் சேகரிக்க வேண்டிய நிலையில் இருந்தன. இத்திட்டத்தின் செயல்பாடு கடந்த சில ஆண்டுகளில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டத்தினை புதுப்பித்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  1. திருக்குளங்களின் உள்ளும் புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்.
  2. திருக்குளங்களைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல்
  3. தூர் எடுத்தல் மற்றும் ஆழப்படுத்துதல்
  4. திருக்குளங்களில் உள்ள படிகளைச் சீரமைத்தல்
  5. திருக்குளங்களுக்கு மழைநீர் வருவதற்கு வழி ஏற்படுத்துதல் மற்றும் உபரிநீர் வெளியேற்றுதல்

தங்கரதம் மற்றும் வெள்ளிரதம்


திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உற்சவமூர்த்தியை தங்க ரதத்திலோ, வெள்ளி ரதத்திலோ எழுந்தருளச் செய்து ரதம் இழுப்பது நீண்டகால வழக்கத்தில் உள்ளது. தற்போது கீழ்க்காணும் 63 திருக்கோயில்களில் தங்கரதமும் 49 திருக்கோயில்களில் வெள்ளிரதமும் பயன்பாட்டில் உள்ளன.


தங்கரதம் உள்ளதிருக்கோயில்கள் விவரம்

வ. எண் திருக்கோயில் பெயர்

1

அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானம்,பாண்டிச்சேரி   

 

வெள்ளிரதம் உள்ள திருக்கோயில்கள் விவரம்

வ. எண் திருக்கோயில் பெயர்

1

அருள்மிகு மணக்குள விநாயகர் தேவஸ்தானம்,பாண்டிச்சேரி

மரத்திருத்தேர் பராமரிப்பு


இந்து சமய அற நிலையத்துறையின் கீழுள்ள திருக்கோயில்களில் நிறுத்தப்பட்ட தேரோட்ட விழாக்களை நடத்தவும் திருத்தேர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பட்டயப் பொறியாளர்கள்


திருக்கோயில்களின் திருப்பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் தயாரித்தளிப்பதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறையிலும் நெடுஞ்சாலைத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள் பட்டயப் பொறியாளர்கள் அங்கீரிகரிக்கப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட பட்டயப் பொறியாளர்கள் மூலமாக திருக்கோயில்களைச் சீரமைப்பதற்குரிய கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான வரை படங்கள், மதிப்பீடுகள் தயார் செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


ஸ்தபதிகள்


சிற்ப சாத்திர மற்றும் ஆகம சாத்திர விதிகளில் வரையறுக்கப்பட்டபடி திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தம் முன்னோர் மூலம் வழி வழியாக இக்கலையை நன்கு கற்றறிந்தோர், சிற்ப சாத்திரக் கலையில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றுள்ளோர் ஆகியோர் ஸ்தபதிகளாக அங்கீகாரம் செய்யப்படுகின்றனர்.