Screen Reader Access     A-AA+
×
Go-Top 
General

திருக்கோயிலும், தமிழும்


ஆழ்வார்களும், நாயன்மார்களும், அருளாளர்களும், துறவிகளும் தாங்கள் சென்ற இடமெல்லாம் இறைவனைப் போற்றிப் பாடி வணங்கியுள்ளனர். அத்தகைய அருளாளர்கள் அருளியதேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆகியவை பக்தியை போற்றி வளர்த்ததோடு, தெய்வத் தமிழ் மொழியும் செழித் தோங்கிட துணையாக அமைந்துள்ளன.


பக்தர்களுக்கு அடிப்படைவசதிகள்


  • குடிநீர்வசதி
  • திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர் ஆங்காங்கே வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • நவீனக் கழிப்பிட வசதி
  • திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கும் வருகைக்கும் ஏற்றவாறு நவீன கழிப்பிட வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது.

  • தங்கும் வசதி
  • திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் தேவையினடிப்படையில் அவர்கள் தங்குவதற்கு வசதியாக திருக்கோயில்களில் தேவையான அளவில் குடில்கள், தங்கும் அறைகள், துயில் கூடங்கள், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • திருக்கோயில் களைத் தூய்மையாகப் பராமரித்தல்
  • திருக்கோயில் களைத் தூய்மையாகப் பராமரிப் பதற்குத் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


உலோகத் திருமேனிகள் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் பாதுகாப்பு


திருக்கோயில்களுக்குச் சொந்தமான உலோகத்திருமேனிகள், ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாத்திடகளவு எச்சரிக்கைமணி, கோள்சொல் கடிகாரம், தொட்டிப் பூட்டு, இரும்பு வாயிற்கதவுகள், கண்காணிப்பு ஒளிப்படக்கருவிகள் ஆகியன பொருத்துதல், இரவுக் காவலர்கள்நியமனம், திருக்கோயில் பாதுகாப்புப் படையினர் நியமனம் ஆகியன திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான விலைமதிப்பற்ற உலோகத் திருமேனிகளைப் பாதுகாக்கும் பொருட்டு திருக்கோயில்களில் உலோகத்திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டுள்ளன.