தல வரலாறு
சனி ஆதிக்கத்தால் நாடு இழந்த நளமகாராஜா காட்டில் திரிந்த போது தீயில் மாட்டிக்கொண்ட கார்கோடகன் எனும் அரவத்தை காப்பாற்றிய நளனை கார்கோடகள் தீண்டியதால் உருமாறிய நளனுக்கு சனி கலி முடிந்ததும் தன் நாடு, மனைவி, மக்கள், பதவியை மீண்டும் பெற பொன் ஆடை கொடுத்து உதவிய கார்கோடகன் தங்கிய தலம். நளனின் வேண்டுதலை ஏற்று கார்கோடகன் சிவ லிங்கத்தை நிறுவி பூஜை செய்த தலம். இதுநாள்வரை இங்கு யாரையும் எந்த நாகமும் தீண்டாத தலம். சோழர் காலத்தில் கட்டிய கோயில் இது. சோழர் காலத்தில் மட்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.